கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அரச மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபைக் கொடியும் ஏற்றப்பட வேண்டும் என அம்மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையிலுள்ள மாகாண சபையில் நேற்று நடைபெற்றது.இதன்போது, கிழக்கு
மாகாணத்தில் நடைபெறும்
அனைத்து நிகழ்வுகளிலும்
தேசியக்கொடி ஏற்றப்படும்போது,
மாகாண சபைக் கொடியும் ஏற்றப்பட
வேண்டும் என்று கோரும் பிரேரணையை
சமர்ப்பித்து உரையாற்றினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில்
நடைபெறும் அரசாங்க நிகழ்வுகளையும் ஏனைய கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளையும்
அவதானிக்கும் போது ஒரு சில நிகழ்வுகளைத் தவிர, ஏனைய நிகழ்வுகளில்
தேசியக்கொடியும் அந்நிகழ்வுகளுடன்
சம்மந்தப்பட்ட கொடிகளுமே
ஏற்றப்படுவதை அவதானிக்க
முடிகிறது.
குறிப்பாக, எமது மாகாணத்தின் கௌரவத்தைப்
பேணுவதற்காக அனைத்து
நிகழ்வுகளிலும் மாகாண சபைக் கொடியும்
ஏற்றப்பட வேண்டும்
என்ற பணிப்பை
இம்மாகாண சபை மூலமாக கிழக்கு
மாகாணத்தில் உள்ள அனைத்துத் திணைக்களங்கள்,
சபைகள், கழகங்கள்
அலுவலகங்களுக்கும் விடுக்க
வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த கிழக்கு
முதலமைச்சர் நஸீர் அஹமட், ‘இவ்விடயம்
தொடர்பில் கட்சித்
தலைவர்கள் கூட்டத்தில்
ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்தப்
பதவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முதலமைச்சர்,
அமைச்சர்கள், தவிசாளர்,
பிரதித் தவிசாளர்
மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்
மாகாண சபைக் கொடியை ஏற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு
எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றார்
0 Comments:
Post a Comment