
போரதீவுப்பற்று பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அப்பிரதேசத்திலுள்ள உணவுக்கடை உரிமையாளர்கள், சிற்றுண்டிக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போரதீவுபப் பற்றுப் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.குணராசசேகரம் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார்.
உணவு வகைகளை எவ்வாறு சுத்தமாக பேணுதல், உணவுகளை சுத்தமாக மக்களுக்கு வினியோகித்தல், மற்றும், சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுதல், போன்ற பல விடையங்கள் தொடர்பில் விக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இதன்போது போரதீவுப்பற்று பிரதேச சபைச செயலாளர் கே.தவராசா, பிரதேச சனசமூக உத்தியோகஸ்தர் ம.கருணாநிதி, மற்றும் போரதீவுப் பற்று பொது சுகாதார வைத்திய அலுவலகத்தில் கடமை புரியும், பொது சுகாதார பரிசோதகர்களும் இதன்போது கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
0 Comments:
Post a Comment