(ஜுனைதீன் முஹம்மட் சியான்)
அக்கரைப்பற்றில் மாடு அறுக்கும் தளமானது தற்போது இருக்கும் பிரதேச செயலக கட்டிடத்துக்கு பின்னால்
பல வருடங்களுக்கு
முன்னால் அமைய பெற்றிருந்தது.பிற்காலத்தில் மாடு அறுக்கும் தளத்தை சுற்றி மக்கள் குடியேற்றம் மற்றும் அரச காரியாலங்கள் வந்ததன் பின்னால் மாடு அறுக்கும்
தளமானது அக்கரைப்பற்று
14 பிரிவுக்குள் கடற்கரையை
அன்மித்த பகுதியில்
அக் கால கட்டத்தில் அப் பகுதியில்
மக்கள் குடியேற்றம்
இல்லாத காரணத்தால்
மாடு அறுக்கும்
தளம் அங்கு அமைக்க பட்டு தற்போதும்
அங்கு இயங்கி வருகிறது
இம் மடுவம் அமைந்துள்ள பகுதி சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நடமாற்றம் குறைவாக இருந்த ஒரு பகுதி என்பதால்
அது இயங்குவதில்
பெரிதான சிக்கல்கள்
இருக்கவில்லை.தற்போது அதனைச் சூழ மக்கள் குடியேறி வாழ்ந்து வருவதனால்
இம் மடுவத்தின்
அமைவிடம் மக்களுக்கு
சிரமத்தை வழங்குவதோடு
ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்றது.இதிலிருந்து
வெளிவரும் துர்நாற்றம்
மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதோடு அப் பகுதியில் நாய்களின் தொல்லைகளும்
காணப்படுகின்றன .
சுகாதார ரீதியாக நோக்குகின்ற போதும் அவ் மடுவத்தின் அமைவிடமும் மக்கள் வாழ்விடத்துக்கும் 50m அளவான தூரம் காணப்படுவதனால் சுகாதார ரீதியாக பல பிரசினைகள்
காணப்படுகிறது.
அப் பகுதி தற்போது பல முன்னேற்றம்களை அடைந்து வருவதனால்
இவ் மாடு அறுக்கும் தளம் அவ் இடத்தில் இருப்பது சரியானது
இல்லை என்பது அப் பகுதி மக்களின்
கருத்தாகும்
ஆகவே மக்கள் சுகாதார ரீதியாக வாழ்வதற்க்கும் சிறு குழந்தைகள்
தூய்மையான காற்றை சுவாசிப்பதற்க்கும் தொற்று நோய்களில் இருந்து விடுபடுவதற்ற்கும் அவ் இடத்தில்
இருக்கும் மாடு அறுக்கும் தளத்தை வேறு மக்கள் குடியேற்றம் இல்லாத பகுதியில் அமைப்பதற்கு வழிவகுக்குமாறு சம்பந்த பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியில்
வாதிகளிடம் தாழ்மையுடன்
கேட்கின்றோம்.
1.அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர்
2.அக்கரைப்பற்று
பிரதேச செயலாளர்
3.மாகாண சபை உறுப்பினர் தவம்
4.அக்கரைப்பற்று
சுகாதார வைத்திய அதிகாரி
5. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்
6.காதிரியா
ஜும்மா பள்ளி தலைவர்
0 Comments:
Post a Comment