21 Jun 2016

18 மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடியில் நிருமாணிக்கப்பட்ட நவீன மீன் சந்தைக் கட்டிடத் தொகுதி புதன்கிழமை மக்கள் பாவினைக்கு கையளிப்பு

SHARE
18 மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடியில் நிருமாணிக்கப்பட்ட நவீன மீன் சந்தைக் கட்டிடத் தொகுதி புதன்கிழமை மக்கள் பாவினைக்கு கையளிப்பு
நெல்சிப் திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் ஓட்டமாவடி பாலத்தை அண்டியதாக நிருமாணிக்கப்பட்டுள்ள
நவீன மீன் சந்தைக் கட்டிடத் தொகுதி புதன்கிழமை (ஜுன் 22, 2016) மாலை 4 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவினைக்கு கையளிக்கப்படவுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் தெரிவித்தார்.

கிழக்கின் பிரதான மீன்பிடி நகர்களான அருகருகே அமைந்துள்ள வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியில் மீன் சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்று இல்லாதது நீண்டகாலக் குறையாக இருந்து வந்தது.

இதனை நிவர்த்திக்கும் முகமாக நெல்சிப் திட்டத்தின் கீழ் 31 கடைத் தொகுதிகள் கொண்ட நவீன மீன் சந்தைக் கட்டிடத்தின் நிருமாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு 18.57 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.எம். ஸாபி தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: