16 May 2016

மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையம் நாளை திறந்துவைக்கப்படும்.

SHARE

(டிலா)

மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனத்தின் விசேட தேவையுடையோருக்கான தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா நாளை (17) செவ்வாய் கிழமை நடைபெறவுள்ளது.
நிறுவனத்தின் தலைவர்

ஏ.கமறுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்துகொள்ளவுள்ளார். கெளரவ அதிதிகளாக பிரதேச செயலாளர்களான எம்.எச்.முஹம்மட் கனி, கே.லவநாதன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கல்முனை வாடி வீடு வீதியில் இல:127 எனும் முகவரியில் காலை 10.00 மணிக்கு இந்த தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இங்கு 16 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கு கணணி, நீர்க்குழாய் பொருத்துதல், மின் இணைப்பு, தையல், உணவுப்பண்டம் தயாரித்தல், அலங்கார பொருட்கள் உற்பத்தி போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மருதமுனை ஹியுமன் லின்க் நிறுவனம் சமூகசேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கல்முனை பிராந்தியத்தில் விசேட தேவையுடை பிள்ளைகளை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான கற்றல், திறன் விருத்தி மற்றும் வழிகாட்டல்களை முழு நேரமாக வழங்கிவருகின்ற ஒரு நிறுவனமாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: