21 May 2016

நாட்டில் கடுமையான காற்று வீசக்கூடுமாம்

SHARE
வங்காள விரிகுடாவில் மையம் கொண்ட ரோனு புயல் தற்போது காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 1100 கிலோ மீற்றரில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
ரோனு புயலானது நாட்டை கடந்து செல்லும் சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் நாட்டில் கடுமையான காற்று வீசலாம் என்றும் குறிப்பாக கடலோர பிரதேசங்களில் இதன் தாக்கத்தை கூடுதலாக அவதானிக்கலாம் என்றும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிழ்க்கு மாகாணத்தில் 2.00 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள வானிலை அவதான நிலையம், மக்களை இடி, மின்னல் குறித்து அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது
SHARE

Author: verified_user

0 Comments: