19 May 2016

சமஸ்ட்டியே எங்களது கொள்கை சம்பந்தன் ஐயாவே எங்களது தலைவர்!

SHARE
சமஸ்ட்டியே எங்களது கொள்கை சம்பந்தன் ஐயாவே எங்களது தலைவர் சாத்வீகம்தான் எங்களது வழி, சமத்துவம்தான் எங்களுடைய இலக்கு, என்பவற்றை எமது தாரக மந்திரமாகப் பாவித்து மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்த தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி புதன்கிழமை (17) மாலை விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

அதிஉயர்ந்த தியாகங்களை விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரைக் காத்திட வேண்டிய மிகப் பெரிய பெறுப்பு எம்மிடம் உள்ளது. எமது கணக்கெடுப்பின்படி 1400 இற்கு மேற்பட்ட அப்பவித் தமிழ் உயிர்கள் முள்ளிவாய்காலிலே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். உலக வரலாற்றிலே எங்குமே நடாக்காத இப்படுகொலை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ளோயே நடந்தேறியிருக்கின்றன. இந்த இரத்தக்களவெறியான ஊழித்தாண்டவ நிகழ்வு முடிவடைந்தபோது எமது சோகத்தை வெளியிட வார்த்தைகள் விடாமல் அடங்கிக் கிடந்தோம்.

அப்போது ஓ… என்று கத்துவதை விட எமக்கு வேறு வழியில்லையா? என ஏங்கித் தவித்திருந்தோம். காலம் கரைபுரள உலகத்தின் கண்கள் இலங்கையை நோக்கிக் குவிந்தன, ஆகுதியாகிய எமது உறவிகளின்  தியாகங்கள் உலகத்தின் கண்ணைத்திறக்க வைத்தன. ஐக்கிய நாடுகள் சபை இந்நாட்டின் மீது அக்கறையுடன் செயற்படத் தொடங்கின. அதன் காரணமாகத்தான் இப்பொழுது  முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற பொறுப்பை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவைகளனத்திற்கும் உயிர் நீத்த எமது உடன் பிறப்புக்களின் தியாகங்களால்த்தான் வந்துள்ளது.

இந்த தியாகங்களின் வெகுமதியாக நாம் எதிர் பார்த்துக் கொண்டிருந்த இந்த நாட்டுக்கான புதிய அரசியல் அமைபொன்றை ஆக்குகின்ற செயற்பாடாகும். இது ஒரு சாதாரணமான செயற்பாடாகக் கருதிவிட முடியாது. இந்நிலையில்த்தான் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குகின்ற பொறுப்பு எம்மிடம் முக்கிய மான பொறுப்பாக கையகப் படுத்தப் பட்டுள்ளது. 

இவ்வேளையில் கடந்து சென்ற பாடங்களை மனத்திலே தியாகங்களாக நிறுத்திக் கொண்டு இனிமேல் இதுபோன்ற இழப்பு ஏற்படாத வகையில் மிகவும் நிதானமாக, பக்குவமாக அறிவு பூர்வமாகச் செயற்பட்டு, ஒரு மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் செய்திட்ட தியாகங்களால்தான் இவ்வாறானதொரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு காரணமாய் அமைகின்றது.

எமது தலைமை காட்டுகின்ற வழியில் நடைந்து அனைவரும் பொறுமையுடன் செயற்பட்டு, அறிபூ பூர்வமாகச் செயற்பட்டு, உணர்வுகளை அடக்கிக் கொண்டு செயற்பட வேண்டும். 

சமஸ்ட்டியே எங்களது கொள்கை சம்பந்தன் ஐயாவே எங்களது தலைவர் சாத்வீகம்தான் எங்களது வழி, சமத்தவம்தான் எங்களுடைய இலக்கு, என்ப வற்றை எமது தாரக மந்திரமாகப் பாவித்து மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும். 

நடைபெறவிருக்கின்ற புதிய அரசியலமைப்புச் சட்டம் ஆக்கவிருக்கின்ற நிகழ்வில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டம் ஆக்குவதற்காக 11 குழுக்கள் நாடாளுமன்றிலே அமைக்கப்பட்டுள்ளன இதிலே எமது கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் உள்வாங்கப் பட்டுள்ளார். 

எனவே இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்;குவதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் ஏனைய குழு அங்கத்தவர்களுடன் இனைந்து உழைத்திட வேண்டும், அதற்கு எமது அனைத்து ஒத்துழைப்புக்களையும் கொடுத்திட வேண்டும், என அவர் இதன்போது தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: