எல்ரீரீஈ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளரான பிரபா எனப்படும் கலைநேசன்,
திங்கட்கிழமை 02.05.2016 கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இறுதி போரின்போது வன்னியிலிந்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட கலைநேசன், புனர்வாழ்வுக்குட்பட்டு, 2013 ஆம்ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு திங்கட்கிழமை காலை சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மேலதிக விசாரணைகளுக்காக கல்முனைக்கு கொண்டு அங்கிருந்து கொழும்பு பயங்கரவாத நடிவடிக்கைகள் விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
0 Comments:
Post a Comment