15 May 2016

பேராளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நாடாத்தப்பட்ட தேர்தல் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்

SHARE
கல்வி சேவை ஊழியர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதேச பொதுச் சபைக்கான பேராளர்களை தேர்ந்தெடுப்பதற்காக  நாடாத்தப்பட்ட தேர்தல்  பட்டிருப்பு கல்வி வலய பிரதேசத்தில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
நடாளாவிய ரீதியில் மேற்படி சங்கத்தின் பேராளர்களுக்கான தேர்தல் சனிக் கிழமை (14)  நடைபெற்றது. இதன் அடிப்படையில் பட்டிருப்பு கல்விவலய பிரதேச போராளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இரண்டு பேராளர்களை தேர்ந்தெடுக்க இடம் பெற்ற தேர்தலில் .சச்சிதானந்தம், எஸ்.சதாநாதன், என்.வரதராஜன், பா.செல்வத்துரை ஆகிய  நான்கு ஆசிரியர்கள்   போட்டியிட்டு இருந்தனர். முறைப்படி பொலிசாரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இத் தேர்தல்தலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி  கே.வேல்வேந்தன் பிரதான  தேர்தல் உத்தியோகத்தரகாக கலந்து கொண்டு  நடாத்தியதுடன், இறுதி முடிவினையும் வெளியீட்டு அதற்கான அத்தாட்சி சான்றிதழையும் வழங்கி வைத்தார் .

குறித்த தேர்தலுக்கு 854 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 219 வாக்குகளே அளிக்கப்பட்டிருந்தன.


இதன் பிரகாரம் 126 வாக்குகளைப் பெற்று கா.சச்சிதானந்தம், 97 வாக்குகளைப் பெற்று பா. செல்லத்துரை ஆகிய இருவரும் பிரதேச பொதுச் சபைக்கான பேராளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: