18 May 2016

முதுகெலும்பு அற்ற இணையத்தளங்கள் என் மீது சேறு பூச முனைகின்றது.

SHARE
(RTX)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான ச.வியாழேந்திரன் ஆகிய என் மீது சில முதுகெலும்பு அற்ற இணையங்கள் சேறு பூச முனைகின்றது.
சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யப் போவதாக தவறான செய்திகளை பிரசுரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது எனக்கு வேதனை அளிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் முன்னின்று செயற்படுவதை சில விசக்கிருமிகள் பொறுக்க முடியாமல் இவ்வாறு தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன.
இப்படி பட்ட தவறான செய்திகளை பிரசுரிப்பவர்கள் என்னிடம் நேரில் வந்து பேசியிருக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர் கொள்ளும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன அவையெல்லாம் விட்டு விட்டு தேவைக்கு அற்ற விடயங்களில் இந்த இணையங்கள் செயற்படுகின்றன.
இவ்வாறான தவறான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் மென கூறுகின்றேன்.
ஊடகங்கள் உண்மையை எழுத வேண்டுமெனவும் இந்த தவறான செய்தியை பிரசுரித்த இணையத் தளம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உள்ளேன்.

ச.வியாழேந்திரன் பா.உ அமல் அவர்களின் முகநூலிருந்து
SHARE

Author: verified_user

0 Comments: