மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை சனிக்கிழமை (09) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழ்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ச.வியாளேந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மற்றும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையின் நினைவுக் கல்லை எதிர் கட்சித் தலைவர் திரைநீக்கம் செய்வைக்க அப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள கோழிப் பண்ணையை முதலமைச்சரும், மாட்டுப் பண்ணையை கிழக்குமாகாண முதலமைச்சரும் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
இதன்போது கால்நடை பண்ணையாளர்களுக்கு, பால் கொள்வனவு செய்யும், கேன்களும், வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment