
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தல் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக் கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் இன்னெருவருடன் பயணித்த வேளை அடித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் துரிதமான விசாரணையை முன்னெடுத்து சூத்திரதாரிகளை கண்டிபிடித்துத் தருமாறு கோரி ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து
பிரதேச செயலகங்களிலும் கவனஈர்ப்பு போராட்த்தினை நேற்று முன்னெடுத்து இருந்தனர்.
பிரதேச செயலகங்களிலும் கவனஈர்ப்பு போராட்த்தினை நேற்று முன்னெடுத்து இருந்தனர்.
அதே வேளை கொலை செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவர் ஆகையால் செயலக அனைத்து அலுவலர்களும் சேர்ந்து பாரியளவிலான கவனஈர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் பிரதேச செயலகத்தில் இருந்து போரணியாக காளுவாஞ்சிகுடி மக்கள் வங்கி வரை சென்று மீண்டும் திரும்பி பிரதேச செயலகத்தினைச் சென்றடைந்தனர்.
ஊர்வலத்தி; ஈடுப்பட்டவர்கள் அரசே கிராம உத்தியோதத்தருக்கு பாதுகாப்பு வழங்கு, கயவர்களை கைது செய், இனிமேலும் இந்த வெறியாட்டம வேண்டாம், பதில் கிடைக்கும்வரை கடமை செய்ய மாட்டோம், பொதுமக்களுக்கு சேவை செய்ய வந்தவனுக்கு கிடைத்த பரிசா இது, உரிய அதிகாரிகளே ஒழுங்கான உறுதிமொழியை தாருங்கள், விசாரணையை துரிதப்படுத்துங்கள், போன்ற வாசங்களை ஏந்தியவாறு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தனர்
பின்னர் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் செயலகத்திற்கு முன்பாக உட்காந்து இருந்து அமைதியான முறையில் தங்களுது கவன ஈர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர் இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், கிழக்கு மாகா சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா. நடராசா ஆகியோர் வருகைதந்திருந்தனர் இவர்களிடம் அவ்விடத்தில் வைத்து சூத்திரதாரிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரிடம் இதற்கா விசேட விசாரணைக் குழு வொன்றினை அமைக்க கோருவதாக உறுதியளிக்கப்பட்தனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்
..
0 Comments:
Post a Comment