6 Apr 2016

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக உறுதி

SHARE
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகனேரி கிராமத்துக்கான விஜயம் ஒன்றினை செவ்வாய் கிழமை (05) மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். 

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சுமார்6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள முள்ளிவட்டவான் போன்ற கிராமங்களில் இருந்து போக்குவரத்து வசதிகள் இன்மையால் மிகவும் சிரமத்தின் மத்தியில் இப்பாடசாலைக்கு வருவதாகவும், அவர்களுக்கு இப்போக்குவரத்து வசதிகளை செய்து தருவதோடு, இப்பாடசாலைக்கு கணனிகள் உட்பட, அவசர தேவையாகவுள்ள போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறும் பாடசாலை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வாகனேரி பகுதியில் உள்ள வாகனேரிக்குளத்திலிருந்து 12 கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள பாசிக்குடா போன்ற பிரதேசங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதாகவும். ஆனால் அன்மையில் உள்ள தமது கிராமங்கள் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவித்தனர்.


இக்குடிநீர் பிரச்சனைகள் தொடர்பாக பிராந்திய முகாமையாளருடன் கலந்துரையாடி வெகு விரைவில் நீர் விநியோகத்தினை பெற்றுத்தருவதாகவும், அத்துடன் பாடசாலைக்கான போட்டோ பிரதி இயந்திரத்தை உடனடியாக வளங்குவதோடு எதிர்வரும் ஆண்டில் தனக்கென ஒதுக்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் கணனிகளையும் வளங்குவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அக்கிராம மக்களிடம் உறுதியளித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: