மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மதுபானசாலைக்கு முன்னால் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 6.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தை சேர்நத 4 பிள்ளைகளின் தந்தையான 70 வயதுடைய க.தர்மலிங்கம் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விராசரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
0 Comments:
Post a Comment