27 Apr 2016

பாலியல் துஷ்ரிரயோகம் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் கைது

SHARE
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி - கர்பலா பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24.04.2016) இரவு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்;தர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை
இரவு (25.04.2016) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் இன்று (26.04.2016) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் இவர்கள் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: