(எம்.சறூக்)
தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கிராமியநீர் மற்றும் சுகாதார பிரிவினால் சமூதாய அடிப்படை அமைப்புக்களாhல் முகாமைத்துவம் செய்யப்படும் கிராமியநீர் வழங்கல் திட்டங்களுக்கான நீர் பாதுகாப்புதிட்டம் தொடர்பான தொடர் விழிப்புணர்வு நிகழ்வு.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போதுகிராமிய நீர் வழங்கல் திட்டத்தினை நிலைத்து நிற்கும் நீர் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் முன்கொண்டு செல்ல தேவையான தூய குளோரின் மற்றும் குளோரின் அளவீடு செய்யும் உபகரணங்கள் போன்றன இத்திட்டங்களை முகாமைத்தும் செய்யும் சமூதாய அடிப்படை அமைப்புகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் யுனிசெப், பிளான் சிறிலங்கா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment