14 Apr 2016

துர்முகியிலும், வாட்டி வதைக்கும், காட்டு யானைகள்.

SHARE
மட்டககளப்பு மாவட்டத் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் புதன் கிழமை அதிகாலை புகுந்த இரண்டு காயட்டு யானைகளால் மக்கள் நடுராத்திரியில் அல்லோல கல்லோலப் பட்டுள்ளனர்.
புதன் கிழமை இதிகாலை ஒரு மணியளவில் 2 காட்டு யானைகள் இக்கிராமத்தினுள் புகுந்தத்தினால் மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறி, தீப்பந்தம் எந்தியும், பட்டாசு கொழுத்தியும், யானைகளை விரட்ட முற்பட்ட போதும், கானைகள் கிராமத்தினை விட்ட நகரவில்லை,

பின்னர் கிராம மக்கள் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்கள் அவ்விடத்திற்கு வந்து அதிகாலை 3 மணியளவில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துளைப்புடன் யானைகளை விரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இக்கிராமத்திலிருந்த வீடு ஒன்றை முற்றாக உடைத்து சேதப் படுத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்து பாவனைப் பொருட்கள், 5 நெல் மூட்டைகளையும், சேதப்படுத்தியுள்ளதாக வீட்டு உரிமையாளரம் இரங்கநாதபிள்ளை தெரிவித்தார். 











SHARE

Author: verified_user

0 Comments: