தேசிய நெல் உற்பத்தியில் 25 சதவீதமான நெல் உற்பத்தி கிழக்கு மாகாணத்திலிருந்து கிடைக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.
மண்டூர் பிரசேத்தில் சனிக்கிழமை ஒருங்கிணைந்த பண்ணைத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் 60 தொடக்கம் 65 சதவீதமானோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் கௌப்பி உற்பத்தியில் 75 சதவீதமும் சோளம் உற்பத்தியில் 17 சதவீதம் தொடக்கம் 20 சதவீதமும் பழச் செய்கையில் 30 சதவீதமும் மரக்கறிச் செய்கையில் 50 சதவீதமும் கிடைக்கின்றன.
இம்மாகாணத்தில் பால் உற்பத்தியில் 3 சதவீதம் தொடக்கம் 2 சதவீதம் கிடைப்பதுடன், கால்நடை வளர்ப்பில் 30 சதவீதமான கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், இங்கு பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்காக தற்போது நல்லின கால்நடைகளை எமது கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாயத் திணைக்களத்தினால் வழங்குகின்றோம்.
பயிர்ச்செய்கை மற்றும் நெற்செய்கையை ஊக்கப்படுத்த எமது அமைச்சு விவசாயிகளுக்கு உதவி வருகின்றது. இந்த ஒருங்கிணைந்த பண்ணை நான்கு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையினை கால்நடை வளர்ப்பார்கள், விவசாயிகள் நன்கு பயன்படுத்த முடியும் என்றார்.
0 Comments:
Post a Comment