11 Apr 2016

வெருகல் படுகொலையின் 12 ஆவது நினைவு நிகழ்வு

SHARE
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு வெருகல் படுகொலையின் 12 வது நினைவு நிகழ்வு ஞாயிறன்று மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலுள்ள கதிரவெளியில் இடம்பெற்றது
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றின் மறுகரையில் இடம்பெற்ற படுகொலையின் காரணமாக அந்த இடத்திலேயே கருணா அணியைச் சேர்ந்த 210 போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்வத்தை நினைவு கூரும் முகமாக வருடாந்தம் வெருகல் படுகொலை எனும் பெயரில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்;றன.

இதேவேளை வெருகலம்பதி முருகன் ஆலயத்தில் இறந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விஷேட பூஜை வழிபாடுகளும் அன்னதானமும் இடம்பெற்றன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்ட 210 போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை கடந்த 11 வருடங்களாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலேயே நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

பிள்ளையான் கொலைக்குற்றச் சாட்டின் பேரில் கடந்த ஆறு மாதகாலமாக விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியல் கைதியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: