மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபைப் பிரிவிலுள்ள எல்லை நகர், மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைப் பிரிவிலுள்ள செங்கலடி ஆகிய பிரதேசங்களின் நீர் வடிந்தோடும் பிரதான நீரோடைகளைத் துப்புரவு செய்யும்
பணிகள் ஞாயிறன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இந்த துப்புரவு வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை ஆகிய இரு பெரும் பிரிவிலுள்ள நகர பிரதேசங்களின் வடிகான்கள், நீரோடுமிடங்கள், முழுமையாக செப்பனிடப்படும்போது போது டெங்கு நுளம்புப் பெருக்கத்தைத் தடுப்பதோடு நகரத்தைத் துப்புரவாக வைத்திருக்கவும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கவும் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்ப நிகழ்வில் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment