5 Mar 2016

மட்.மெதடிஸ்த மத்திய கல்லூரி வினாடிவினாப் போட்டியில் முதலாம் இடம்

SHARE
(க.விஜி)

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த  மத்திய கல்லூரி கல்வியமைச்சு,டோக்கியோ சீமேந்து நிறுவனம், சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனங்களினால் கூட்டாக இணைந்து நாடாத்திய வினாடிவினாப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்று முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளது.
இதன்மூலம் அகில இலங்கைரீதியில் பங்கு பற்றுவதற்கு எதிர்வரும் வாரங்களில் கொழும்பு செல்லவுள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த  மத்திய கல்லூரி அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்  கடந்த 2016. 1.28.அன்று  மேற்கூறப்பட்ட நிறுவனங்களின் அனுசரனையுடன் வினாடி வினாவிடைப் போட்டி புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் வலயத்தில் உள்ள 15 பாடசாலைகள்  பங்குபற்றியது. எமது பாடசாலையில் இருந்து ரீ.நரேஸ்கர்,.நெறஞ்சராஜ், பீ.ஜனார்த்தன், ஜே.சுகிர்தன், எம், டிலக்சன், ரீ.சுபேகரன் ஆகிய மாணவர்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டு களமிறக்கப்பட்டனர்.

இதன்போது எமது பாடசாலையின் அணியினர் உற்சாகத்துடனும் விவேகத்துடனும் போட்டியில் பங்குபற்றி ஏனைய பாடசாலைகளைவிட முதலாம் இடத்திற்கு நிரல்படுத்தப்பட்டனர்.


இப்போது அகில இலங்கை ரீதியில் 52 பாடசாலைகளுடன் வினாவிடைப்போட்டிக்கு பங்குபற்றுவதற்கு  செல்லவுள்ளது. இவ்வினாடி வினாப் போட்டியில் எமது பாடசாலை மாட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக எமக்கு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றீதழ்களும், பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பாடசாலைக்கும் ,சமூகத்திற்கும் இப்புலமையாளர்கள் பெருமை தேடித்தந்துள்ளார்கள். இதனால் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதனை மாணவர்களுக்கு  முழுமையாக தயார்படுத்தி ,ஒழுங்கமைத்து ,வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர் திருமதி தயானந்தி ஜெகநாதன் ஆசிரியருக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: