8 Mar 2016

இலங்கை கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு இளைஞனுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE
இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia)போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெயசூரியம் சஞ்சீவுக்கான தேவையான உபகரணங்களை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு வழங்கி வைத்தது.
இந்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை பகல் மட்டக்களப்பு பாடுமீன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிறிக்கட் சபையின் தலைவர் பொறியியலாளர் ரி.ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர். இ.சாணக்கியன் உபகரணங்கள், உபகரணங்கள் கட்டளையையும் வழங்கி வைத்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த சாணக்கியன், அரசாங்கமானது வடகிழக்கிலுள்ள இளைஞர்களையும் ஊக்குவிக்குவித்து அவர்களையும் மேம்படுத்த நிறைய உதவிகளை கிரிக்கட்ட நிறுவனம் ஊடாகவும் மேற்கொண்டு வருகிறாரக்ள்.அதே நேரத்தில் மட்டக்களப்பிலுள்ள அதிகாரிகளும் மிகவும் நன்றான முறையில் கிரிக்கட்டை ஊக்குவிப்பதற்காக செயற்பட்டு வருகிறார்கள்.

சஞ்சீவ் இலங்கை தேசிய அணியில் 25 வயதுக்கு ட்பட்டஅணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது பாராட்டுக்குரியது. இவரைப்போன்று இன்னும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியில் முன்னேற வேண்டும்.

இவர் தெரிவு செய்யப்பட்டமையானது மட்டக்களப்பின் ஏனைய இளைஞர்களுக்கும் ஊக்குவிப்பாக இருக்கும். இவரை ஊக்குவிப்பதற்கான உதவிகளை தொடர்ந்தும் செய்வோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜெயசூரியம் சஞ்சீவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: