22 Mar 2016

துறைநீலாவணை சுவாமி விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

SHARE
துறைநீலாவணை சுவாமி விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு துறைநீலாவணை 6 ம் வட்டாரத்தை சேர்ந்த அவுஸ்ரேலியாவில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற பொன்னுத்துரை.மோகன் அவர்களின்  நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் அதிபரும்,இவ்வாலயத்தின் தலைவருமான
முத்துக்குமார் இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் தலைவரும்அதிபரும்,சமூகசேவையாளருமான  மு.இராஜகோபால்இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சோ.சந்திரகுமார்,துறைநீலாவணை தெற்கு மகளீர் சங்க செயலாளர் செல்வி பா.வனிதா ஆகியோர்கள் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு(50பேருக்குகற்றல் உபகரணங்கள் வழங்கிவைத்தார்கள்

.
SHARE

Author: verified_user

0 Comments: