(இ.சுதா)
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வழியில் அவர் கூறியுள்ள திருக்குறளைப் பின்பற்றி வாழ்வில் நடப்போமேயானால் நாம் வாழ்வில் உயர்வடையலாம். 1330 திருக்குறளும், எமக்குக் கிடைத்த பெரும் கொடையாகும். தற்போது இந்த திருக்குறள் தமிழில் மாத்திரமின்றி,
ஆங்கிலம், ஹிந்தி, போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பலராலும் படிக்கப்பட்டு வருகின்றன. எனவே மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குள்களையும், மனனம் செய்ய வேண்டும், என மட்.களுமுந்தன்வெளி சக்தி அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் வ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் குருபூசைத்தினத்தை முன்னிட்டு, இன்று ஞாயிற்றுக் கிழமை (06) திருவள்ளுவருக்கு மேற்படி அறநெறிப் பாடசாலையில் இந்து சமய காலாசார அலுல்கள், திணைக்களத்தின், ஆலோசனைக்கமைய வழிபாடுகள் நடைபெற்றன. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
பெய்யாமொழி, பொதுமறை, போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் திருக்குறளை இவ்வுலகிற்கு இரண்டு வரி வடிவங்களில் மிகவும் தெழிவாக எடுத்துத் தந்துள்ளார். மனித வாழ்வுக்குத் தேவையான அனை;து நல்வழிகளையும், 1330 குறள்களில் எடுத:துரைத்தள்ளார்.
மாணவர்கள் மாத்திரமின்றி பெரியவர்களும், பெற்றோர்களும். எனைய இளையுர் யுவதிகளும். திருக்குளறைப் பின்பற்றி வழ்வில் நடப்பார்களேயானால், வீன் பிரச்சனைகளுக்கும். சன்டை சச்சரவுகளுக்கும், கலாசார சீர்கேடுகளுக்கும் செல்லமாட்டார்கள். வாழ்வில் முன்நேறத் துடிப்பவர்கள், திருவள்ளுவரை வணங்கிக் கொண்டு திருக்குறளைப் பின்பற்றி நடாந்தால் முன்நேற்றங்கள் தாமாகவே வந்துவிடும்.
பாடவிதானங்களிலும் திருக்குள் ஒரு பாடமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும், அனைத்து திருக்குறள்களையும், மனனம் செய்வதோடு அவற்றுக்குரிய பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும். எமது அண்டை நாடான இந்தியாவில் தரம், 2, 3 இல் கற்கும் மாணவர்கள் 1330 திருக்குளங்களையும், மனனம் செய்து அவ்றுக்குரிய பொருளையும் விளக்குகின்றார்கள், ஆனால் எமது பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் உரு அதிகாரத்திலுள்ள திருக்குறளைச் சொல்வதற்குத் தயங்குகின்hர்கள். இந்த நிலமை மாற்றடைவேண்டும். எனவே இன்றிலிருந்தாவது அனைத:து மாணவர்களும், திருக்குறளை மனனம் செய்ய திடசங்கற்பம் பூணவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடந்த 24.02.2016 அன்று தெய்வப்புலவர் திருவள்ளுவரது குருபூசைத்தினமாகும், இதனை முன்னிட்டு, இன்று ஞாயிற்றுக் கிழமை (06.03.2016) நாடளாவிய ரீதியில் இந்து சமய காலாசார அலுல்கள், திணைக்களத்தின், ஆலோசனைக்கமைய அறநெறிப் பாடசாலைகளில் தெய்வப்புலவர் திருவள்ளுவரது குருபூசைத்தினம் நடைபெற்றன. இதன்போது மாணவர்கள் மத்தியில் திருக்குறள் மனனப்போட்டிகள், செற்பொழிவுகளும், இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment