12 Mar 2016

வாகனம் மின்கம்பத்துடன் மோதியதில் டெலிகொம் முன்னாள் உத்தியோகத்தர் மரணம்

SHARE
குருநாகல் மாவட்டம் கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல், கொக்கரல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மட்டக்களப்பு காத்தான்குடியை வசிப்பிடமாக கொண்ட சிறீலங்கா டெலிகொம் முன்னாள் உத்தியோகத்தரான முஹம்மத் பஷீர் (வயது 40) மரணமடைந்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வேன் கொக்கரல்ல பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளது

இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற  இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: