12 Mar 2016

அரச உத்தயோத்தர்களுக்கான போதைத் தடுப்புக் கல்விப் பயிற்சிப்பட்டறை

SHARE
அரச உத்தயோத்தர்களுக்கான போதைத் தடுப்புக் கல்விப் பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (10) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், தேசிய போதைப்பொருள் தடுப்புத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் திவிநெகும பிரதிப் பணிப்பாளர் லி.குணரெட்ணம், மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் போதைப்பொருள் விழிப்புணர்வு தகவல் உதவியாளர் இதுரிகா நதிசானி சுபுன் உதான உள்ளிட்டொர் கலந்து கொண்டனர்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையானது இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒளடதங்கள் கட்டுப்பாடு தடுப்பு மற்றும் புனர்வாழ்வு சேவைகள் முறை என்பவற்றின் தொழிற்பாடுகளை முன்னிலை அரச நிறுவனத்தில் மேற்கொள்கி;றது.

அதன் முதற்கட்டமாக ஒளடத கட்டுப்பாட்டுக்கல்விப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் நடத்தியது.

100க்கும் மேற்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வெளி;க்கள உத்தியோகத்தர்களாக கடமை புரியும் அரச உத்தியோகத்தர்கள்  பங்கு கொண்டனர்.

இப் பயிற்சிப் பட்டறையின் போது அரச உத்தியோகத்தர்களுக்கு போதைப் பொருளின் பாதிப்பு, அதனகை; கட்டுப்படுத்துவதன் தேவை, கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இத் திட்டமானது ஜனாதபிதியின் ஊட்டச்சத்து மேம்பாடு, போதையற்ற நாடு, உணவு உற்பத்தியில் தன்நிறைவு, சிறுநீரகப்பாதுகாப்பு உள்ளிட்ட நால் வகைத்திட்டங்களில் ஒன்றாகும்.

அநதவகையில், போதை தடுப்பை மேற்கொள்வதன் ஆரம்ப நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: