சட்ட விரோதமாக, விற்பனை செய்வதற்காக தம்வசம் 3180 மில்லிலீற்றர் சாராயத்தை வைத்திருந்தார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அப்துல் கனி சாலி (வயது 52) என்ற குடும்பஸ்தருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் வெள்ளிக்கிழமை 04.03.2016 ஆஜர்படுத்தப்பட்டபோது இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சந்தேகநபர் சட்ட விரோதமாக சாராயம் விற்கும் இடத்துக்குச் சென்ற இரகசியப் பொலிஸார் 3180 மில்லிலீற்றர் சாராத்துடன் நபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
0 Comments:
Post a Comment