கிழக்கு மாகாண முதலமைச்சுக்குரிய நிதி திட்டமிடல் சட்டமும் ஒழுங்கும் உள்ளூராட்சி கிராமிய நிர்வாகம் கிராமிய அபிவிருத்தி சுற்றாடல் கட்டிடங்கள் மற்றும் நிர்மாணத்துறை போக்குவரத்து கிராமிய கைத்தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குரிய வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மையை எடுத்துரைப்பதற்கும் 2015
ஆம் ஆண்டில் இவ்வமைச்சுக்குரிய திணைக்களங்கள் மூலம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் செயற்பாடுகள் நிதி பகிர்ந்தளிப்பு சேவைகள் சம்பந்தமாகவும் 2016 ஆம் ஆண்டில் இதன் முன்னேற்றங்கள் அதிகளவான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் முதலமைச்சரின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (11) கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலுக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள பணிப்பாளர்கள் திணைக்கள செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் அதிக தேவைகள் உள்ள திணைக்களங்களை இனங்கண்டு அதற்கு ஒதுக்கப்படும் நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன என்பதும் எவ்வாறான வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . எதிர்வரும் காலங்களில் அதிக நிதி திரட்டப்பட்டு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment