14 Feb 2016

வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

SHARE
மட்டக்களப்பு- கல்குடா கல்வி வலயத்தின் கோறளைப்பற்று கோட்டத்திலுள்ள வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு விழா வித்தியாலய முதல்வர் சா.பாலச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இவ் விளையாட்டு நிகழ்வின் பிரதம அதிதியாக கல்குடா வலயத்தின் முறைசாரா கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி சீ.யோகேஸ்வரி, கொளரவ அதிதியாக கிராம உத்தியோகத்தர் எல்.ஆர்.எஸ். றாகல், சிறப்பு அதிதிகளாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. செல்வராசா, சமுர்த்தி உத்தியோகத்தர்  எம்.காளிராஜா, கே.த.சதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளையாட்டு நிகழ்வில் மாணவர்களின் அணி நடை , உடற்பயிற்சி கண்காட்சி, விளையாட்டு நிகழ்வுகள் பெற்றோர், பழைய மாணவர்கள் நிழ்ச்சிகள்  ஆசிரியர் நிழ்ச்சிகள் என்பன இடம் பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், மற்றும் கேடயங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.










SHARE

Author: verified_user

0 Comments: