29 Feb 2016

எடிசன்' விருது பெற்றார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்

SHARE
தமிழ் மூவி டாட்காம் மற்றும் உலகின் ஒன்பது தொலைக்காட்சிகள் இணைந்து நடத்தும் 9 ஆவது 'எடிசன்தமிழ் திரைப்பட விருது விழா அண்மையில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
தமிழ் திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் தமது திறமையை வெளிப்படுத்திய ஜெயம்ரவி,  அரவிந்தசாமிநயன்தாரா உட்பட பல முன்னணிக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் 'நான்திரைப்படத்தினூடாக தமிழ் சினிமாவில் தடம்பதித்த நம்நாட்டு கவிஞர் ,திரைப்பட பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர் விருதினைப் பெற்றுக்கொண்டார்இவருக்கான விருதினை பிரபல திரைப்பட நடிகை குட்டி பத்மினி வழங்கினார்.

இந்த நிகழ்வில் கவிஞர் பாடிய தமிழ் உணர்வுக்கவிதை பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 








SHARE

Author: verified_user

0 Comments: