29 Feb 2016

இன, மத, ஜக்கியத்தின் வெளிப்பாட்டின் வடக்கு - தெற்கு ஊடகவியலாளா்கள் பறிமாறிக் கொண்டனா்.

SHARE
  அஷ்ரப் சமத் 



மேற்படி ஊடகவியலாளா்க்கான தொடா்ச்சியான செயலமா்வினை இன்டநியுஸ் சிறிலங்கா ஏற்பாடு செய்திருந்தது.  கடந்த சனி ஞாயிறு (27,28)ஆம் திகதிகளில் முழு நாற்கள் தங்கி பயிற்சிப் பட்டரைகளில் 25 க்கும் மேற்பட்ட  ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.  இதில் தினகரன்தினமினலங்காதீபஇருதினராவயசிங்கள பீ.பீ.சியாழ் தினக்குரல்தமிழ் மிரா்மாத்தரை வெப்தளம்,  வீரகேசரிஎங்கள் தேசம்வசந்தம்போன்ற பல ஊடக நிறுவனங்களில் இருந்து இளம் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா் 


அத்துடன்  தத்தமது மதகலைகலாச்சார  உணா்வுகளை சிங்களதமிழ் முஸ்லீம் ஊடகவியளா்கள் ஒருவருக்கு ஒருவா் பரிமாறிக் கொண்டு அதனை தெரிந்து கொண்டனா்.   அத்துடன் கொழும்பு ஹங்காரம பௌத்த பண்சலைமெயின் வீதியின் உள்ள சம்மன்கொட்ட பள்ளிவாசல்வெள்ளவத்தைகாலிமுகத்திடல்சுதந்திர சதுக்கும் , லேக் ஹவுஸ் போன்ற இடங்களுக்கு  விஜயம் மேற்கொண்டனா்.  அங்கு உள்ள விடயங்களை  பாா்வையிட்டனா்.   

சில சிங்கள  பெண்ஆண்  ஊடகவியலாளா்கள் தமது வாழ் நாளிள் பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டது இதுவே முதற் தடவை எனக் கூறினாா்கள்

ஏன் தங்களது முஸ்லீம்  பெண்கள் கூட  பள்ளிவசாலுக்கு செல்லமுடியாது?  என கேள்வி எழுப்பினா். ? உங்களது  பள்ளிவாசலுக்குள் ஒன்றுமே இல்லியே இங்கு அமைதியாக  ஒரு கட்டம் மாத்திரமே அமைந்துள்ளது.   இதற்குள் தெய்வங்கள் சிலைகள் இல்லியே எனக் கேள்வி எழுப்பினாா்கள்அதே போன்றுதான் கொழும்பு 2 இல் உள்ள  ஹங்காராம பண்சலையில் ஏன் புத்தா்கள் ஒவ்வொரு வகையாக இருப்பதை பித்தலையிலான  சிலை செய்துள்ளதையும்  தமிழ் ஊடகவியலாளா்கள்  கேள்வி எழுப்பினாா்கள்ஆனால் இந்தப பண்சலையிலும் எமது கதிா்காம போன்று  ஹிந்து சிலைகளும் உள்ளதே இரண்டு மதத்திற்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் தெரிவித்தனா் 


சிங்கள ஊடகவியலாளா்கள் - அரசியல் வாதிகளே தத்தமது  அரசியல் இலாபத்திற்காகவே  இனங்களையும் இனக்குரோதங்களை வளா்க்கின்றனா்இதனாலேயே இனங்களுக்கிடையே இடைவெளி ஏற்படுகின்றது.  அதன் வெலிப்பாடே அன்மைய சிங்கள லே எனச் சொல்லிக் கொண்டு இனங்களுக்கிடையே குரோதங்களை விதைக்கின்றனா்.

சிங்கள ஊடகவியலாளா் - ஹலால் என்றால் என்ன ? ஆனால் சிங்கள மன்னா்களைக் கூட முஸ்லீம் பெண் காப்பாற்றிய வரலாற்றினை நாம் பாடசாலை காலத்தில்  கற்றுள்ளோம்அன்மையில் கூட மாத்தரையில் சேர் பொன் அருணாச்சலம் மற்றும் இஸ்மாயில் வீதி போன்றவற்றையெல்லாம் சிலா் வீதிப்பலகை உடைத்தெறிந்துள்ளனா்இவைகள் எல்லாம் நாம் பாதுகாத்தல்  வேண்டும்.  அத்துடன் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை பற்றியும் அதனை ஒரு வகுப்பறையில் நடாகமாக சகல மாணவா்களும் ஜக்கியமாக அதனைப்பற்றி அறிந்து கொண்டனா்

 இங்கு வவுனியா  அனு - யாழ்ப்பாணம் வரதன்  ஓட்டமாவடி   ஹாமிலா,  ஹம்பாந்தோட்டை முதலிகே இடை யே வேறுபாடுகள்  கிடையாது.  நாம் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழுகின்றோம்.  இங்கு நாம் அணைவரும் அன்பாக இருந்தோம்சிங்ஙகள ஊடகவியலாளா்கள  தமிழ் வாா்த்தைகளையும் இங்கு வந்து முதன் முதலாக   கற்றுக்கொண்டோம்.  

மாத்தரை பிறந்த எங்களுக்கு வாழ்க்கையில் தமிழ்  வாத்தை ஒன்றை உச்சரிக்கூடிய சா்ந்தாப்பம் கிடைக்கவில்லைநாம் நிறைய தமிழ் சொற்களை  கற்று அறிந்து கொள்வதற்கு எங்களுக்கு சா்ந்தா்ப்பம் இந்த இருநாற்களும் சாந்தா்ப்பம் கிடைக்கப் பெற்றது.

 கங்காராம பண்சலையில்  காணப்பட்ட சில விக்கிரகங்கள் மற்றும் பல வகையான புத்தா் சிலைகள் அது பற்றிய வரலாற்று பதிைவுகளை தமிழ் முஸ்லீம் ஊடகவியலாளா்கள் சிங்கள ஊகடவியலாளா்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டனா்  தெரிந்து கொண்டனா்அதே போன்று புறக்கோட்டையில் உள்ள  மெயின் வீதி சம்மன்கோட்டைப்  பள்ளிவாசல் பற்றியும்  சிங்கள் ஊடகவியலாளா்கள் முஸ்லீம் ஊடகவியலாளா்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்










 


SHARE

Author: verified_user

0 Comments: