மட்டக்களப்பு — காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரை பிரதேசத்தில் வழி தவறி அலைந்து திரிந்த 3 சிறுவர்களை அவர்கள் கல்வி பயிலும் பாடசாலை ஆசிரியர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தாக கிராம சேவை அதிகாரி தெரிவித்தார்.
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தைச் சேர்ந்த 9ம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று சிறுவர்கள் நேற்று புதன்கிழமை மாலை தமது கிராமத்திலிருந்து கடற்கரையைப் பார்ப்தற்காக கல்லடி கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் கடற்கரையில் விளையாடி விட்டு வீடு திரும்புவதற்கு சென்றவேளை வழி மறந்ததால் நேற்றிரவு குறித்த பிரதேசத்தில் தங்கியுள்ளனர்.
இன்று காலை அலைந்து திரிந்த சிறுவர்களை பொதுமக்கள் திருச்செந்தூர் கிராம சேவை அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.
பின்னர் இச்சிறுவர்களை அவர்கள் கல்வி பயிலும் பாடசாலை ஆசிரியர்களை வரவழைத்து ஒப்படைத்தாக கிராம சேவை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்தார்.(ad)

0 Comments:
Post a Comment