1 Jan 2016

எதிர் கொண்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து செயற்பட வேண்டும். வியாளேந்திரன் எம்.பி

SHARE
மலந்திருக்கின்ற புது வருடம் அனைவருடைய வாழ்விலும் மன அமைதியினையும் பூரணத்துவமான நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்தும் வகையில் அமைவதுடன் இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே சகோதரர்களாக வாழ்வதற்கான படிப்பினையினை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் எதிர் கொண்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து எதிர் காலத்தினை வெற்றி கொள்ளும் வகையில் திட்டங்களை வகுத்து அபிவிருத்தி இலக்கினை துரிதமாக எய்தக் கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட இறைவனைப் பிராத்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: