
மட்டு மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக பட்டிருப்பு – பழுகாமம் வரையிலான பிரதான வீதிகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது. இவ்வீதியின் நிலையினை அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் அனைவருக்கும் தெரிவித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவ் அதிகாரிகளும் அரசாங்கமும் செயற்படுகின்றமை மிகவும் மனவேதனை அளிப்பதாக பெரியபோரதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனுடைய பிரதிபலிப்பே 'RDD மற்றும் RDA மற்றும் பிரதேச சபையின்
கவனத்திற்கு இக்குளத்தில் முதலைகள் உண்டு கவனம்' எனும் வாசகம்
பொறிக்கப்பட்ட ஒரு பலகை வீதியின் நடுவே நடப்பட்டடுள்ளது. இதனை மீண்டும்
அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment