29 Dec 2015

நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையினால் கிரமசேவை உத்தியோகத்தர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் மனம் வருந்துகின்றேன் - அமல்

SHARE
நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையினால் கிரமசேவை உத்தியோகத்தர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் மனம் வருந்துகின்றேன். என் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ( அமல்) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கிரமசேவை உத்தியோகத்தர்களிடையே எழுந்துள்ள  சர்ச்சை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

வீட்டுத்திட்டம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அதிகாரிகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் முறைகேடாக நடந்துள்ளனர் என அனைத்து கிரமசேவை உத்தியோகத்தர்களையும் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தேன் ஆனால் அனைத்து கிராமசேவை உத்தியோகத்தர்களையும் சுட்டிக்காட்டியமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினரால் எனக்கெதிராக கண்டண அறிக்கைகளும் வெளிவந்திருந்தது.

இவ்வாறு அனைவரையும் சுட்டிக்காட்டியமைக்கு நான் மனம் வருந்துகின்றேன் இந் நிலையில் நான் ஆற்றிய உரையினால் கிரம உத்தியோகத்தர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காகவும், நான் மனம் வருந்துகின்றேன் எனவும், அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மறுநாள் நான் நாடாளுமன்றில் உரையாற்றுகையில் கிராம உத்தியோகஸ்தர்களின் நலம்புரி விடையங்களில் அரசு அக்கறை செலுத்த வேண்டும், வெற்றிடமாகவுள்ள கிராம சேவகர் உத்தியோகஸ்தர்களை உடன் நிரப்ப வேண்டும், மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களுக்குக் காணப்படும் குறைபாடுகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் உரையாற்றியிருந்தேன், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: