28 Dec 2015

வெள்ளிமலையின் கனவு கலைக்கப்பட்டது?

SHARE
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(28)பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனப்பியள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இடமாற்றம் செய்யக்கோரி சிலர் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றேன்.   இன்று அரசியல் ரீதியாக அதிகாரங்களை இழந்த சிலர் தாங்கள் நி
னைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனதால் அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டுவரும் சிறந்த நிருவாக கட்டமைப்பை சீர்குழைத்து தற்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு விமர்சனத்தினை ஏற்படுத்துவதற்காகவே இந்த இடமாற்றத்தை செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்   ஆகவே, இவரது இடமாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டு வரும் சிறந்த நிருவாக கட்டமைப்பையும் மிக அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் என்பதுடன் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தாமதத்தையும் ஏற்படுத்தும்   எனவே,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாமென கேட்டுக் கொள்வதுடன் ஒரு சிறந்த நிருவாகக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) யின் பெயரில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்ற வேண்டும் எனக் கோரி அண்மையில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: