மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரை அண்டிய பகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் குப்பைகள் கொட்டப் பட்டுவருவதைக் கண்டித்து இன்று செவ்வாய்க் கிழமை (22) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசபைக்கு முன்னால் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்டனர்.
இற்றைக்கு 5 வருட காலமாக இருந்து இக்குறித்த இடத்தில் இப்பிரதேசத்திலுள்ள 45 கிராம சேவகர் பிரிவுகளிலும், சேகரிக்கப் பட்டுவரும் குப்பபைகள் கொட்டப்பட்டு வருகின்றன, இவற்றால் சுற்றுச் சூழலிலுள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு நிலவுகின்றன, இவ்விடத்தில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதை உடன் நிறுத்த வேண்டும், விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகின்றன, ஏற்கனவே இவ்விடையம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும், பல முறைப்பாடுகள் செய்தும் இன்றுவரை தீர்வு எட்டப்பட வில்லை என பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இவ்விடத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.வியாளேந்திரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் நந்தலால், பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரன்,ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது இன்றிலிருந்து இக்குறித்த இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து குப்பைகள் கொட்டப்படமாட்டாது எனவும், இதுவரை கொட்டப்பட்டு வந்த குப்பைகளை எதிர்வரும், 15 நாட்களுக்குள் சுத்தம் செய்வது எனவும், தெரிவித்து பிரதேச சபைச் செயலாளரினால் எழுத்துமூலம் கடிதம் வழங்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment