இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த வாரம் கொழும்புத் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
இதன்போது 2016ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்படி ஒன்றியத்தின் தலைவராக பத்திரிகையாளர் அ.நிக்ஸன், செயலாளராக பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம், பொருளாளராக செல்வி ஜீவா சதாசிவம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏ.பி. மதன் பிரதித் தலைவராகவும், ரவீந்திரன் உப தலைவராகவும், எஸ். ஜே. பிரசாத் உப பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 13 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திற்கான இணைப்பாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment