மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும், தொழில்சார் உளநல நிலையமும், இணைந்து நடாத்திய ஆலோசனை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் “வழித்துணை நூல் வெளியீட்டு நிகழ்வும்” கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை பிரதான மண்டபத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ். மனோகரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு யேசுசபை, மற்றும் தொழில்சார் உளநல பணிப்பாளர் வணபிதா போல் சற்குணநாயகம், காத்தான்குடி உளநல வைத்திய அதிகாரி திருமதி. எஸ்.பரமகுருநாதன் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.லவக்குமார் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாகவும், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தொழில்சார் உளநலப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 62 ஆசிரியர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளரினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் வழித்துணை நூல் வலயக்கல்விப் பணிப்பாளரினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment