17 Dec 2015

அமெரிக்கா வலுவான இலங்கையை காண விரும்புகின்றது - தோமஸ் ஷெனோன்

SHARE
லக்ஸ்மன் கதிர்காமரை கௌரவித்து அவரது பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையின் தந்திரோபாய நலன்கள் குறித்த கற்கைகளிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஸ்தாபனத்தில் இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயம், இலங்கையின் இந்த நலன்கள் குறித்து கதிர்காமரை விட நன்கு அறிந்தவர்கள் வேறு எவருமில்லை, அவர் தேர்ச்சி பெற்ற சர்வதேச சிவில் பணியாளர், வெளிவிவகாரங்களில் இணையற்ற நிபுணத்துவம் வாய்ந்தவர், மூன்று முறை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டவர். 

என லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆலோசகரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகருமான, தோமஸ் ஷெனோன் தெரிவித்துள்ளார். புதன் கிழமை (16) கொழும்பில் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

அவர் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு 10 வருடங்களாகின்றன, எனினும் ஐக்கிய, அனைவரையும் உள்வாங்கும். சமாதான இலங்கை குறித்த அவரது தொலைநோக்கு நாளுக்கு நாள் சாத்தியமானதாக, உண்மையானதாக மாறிவருகின்றது. 

அது சுலபமான விடயம் அல்ல என்பது கதிர்காமருக்கு தெரிந்திருந்தது, அவரது சொந்த வார்த்தைகளில்- “இது தொப்பிக்குள் இருந்து முயலை வரவழைக்கும் மந்திரவித்தையல்ல, சமாதானம் என்பது ஓரேநாளில் உடனடியாக தயாரிக்கப்படப் போவதில்லை, சமாதானம் என்பது நீண்டபாதை கடுமையான செயற்பாடு” 

எனினும் அந்த நீண்டபாதையில் உங்கள் தேசம் ஏற்கனவே பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஜனவரியிலும், ஆகஸ்டிலும் கடந்தகாலங்களின் எரிச்சலூட்டும் தன்மையிலிருந்து விலகி, அனைவரையும் உள்வாங்கும், சமாதான, நீதியான ஜனநாயகமற்றும் வளம்மிக்க எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான உங்கள் உலகம் உறுதிப்பாட்டை உலகம் பார்த்தது, 
ஜனநாயகத்திற்கு புத்துயுர் அளிப்பதற்கு மக்களிற்கு சக்தியுள்ளது என்பதற்கான உதாரணம் இலங்கை. 

தங்கள் தேசத்தின் போக்கினை வாக்குபெட்டிகள் மூலம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஓளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு. நாங்கள் தற்போது இலங்கை ஏனையவர்களிற்கும் புத்துணர்வை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம், எப்படி மிகவும் கடினமான எதிர்காலத்தை கடப்பதற்கும், ஸ்திரமான, வளமிக்க, எதிர்காலத்தை உருவாக்கவும், நாட்டின் பாதுகாப்பு, வளம், கௌரவம் என்பவற்றை பலப்படுத்தவும் நீதியும், கருணையும் உதவ முடியும் என்பதையும் இலங்கை அவர்களிற்கு காண்பிக்க முடியும். 

அமெரிக்கா வலுவான இலங்கையை காண விரும்புகின்றது. சர்வதேச சமூகத்திற்கு தலைவராகவும் சர்வதேச பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் மனித உரிமைகள் மற்றும் நீதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாக்கும், சர்வதேச சட்டங்களைப் பின்பற்ற உதவும் இலங்கையை காண விரும்புகின்றது. தொழில் முனையும் மக்கள், நிறைந்த வளங்கள், தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், போன்றவை காரணமாக இலங்கை இதனை நிறைவேற்றுவதற்கான தனித்துவமான இடத்தில் உள்ளது 
இந்த அழகான கட்டிடத்தின் வரலாறே இலங்கையின் தந்திரோபாய நிலையை வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றது, இலங்கை கடற்படையினர் இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கையளிப்பதற்கு முதல், இந்த கட்டிடம் பிரிட்டனின் வர்த்தகசபையிடம் காணப்பட்டது, பின்னர் இம்பீரியல் லைட்ஹவுசின் ஓரு கிளையும் இங்கு செயற்பட்டது, 

இலங்கையின் கடல்சார்ந்த முக்கியத்துவம் வரலாற்று காலம் வரை நீள்வது உங்களிற்கு தெரியும், புரதான கிரேக்கம், ரோம், அரேபியா மற்றும் சீனாவை சேர்ந்த கப்பல்கள் இலங்கை கடற்பரப்பின் ஊடாக பயணித்ததுடன் துறைமுகங்களிலும் தரித்து நின்றன. 

நான் திருகோணமலை சென்றிருந்தேன், பிரெட்ரிக் கோட்டைக்கு சென்றேன், இது போர்த்துக்கீசர்களால் 400 வருடங்களிற்கு முன்னர் கட்டப்பட்டது ,மேலும் இந்த பகுதி ஐரோப்பாவின் வலிமைவாய்ந்த சக்திகளிற்கு மத்தியிலான தந்திரோபாய மோதலின் பகுதியாகவும் காணப்பட்டது, போர்த்துக்கீசர்கள் ஓல்லாந்தர்களிடம் விரைவில் இதனை இழந்தனர். பின்னர் அது பிரான்சிடம் பல தடவைகள் கைமாறியது இறுதியில் பிரிட்டன் 1795 ம் ஆண்டு அதனை கைப்பற்றியது, 1948 வரை இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு, இரண்டு உலக யுத்தங்களின் போது அதனை பலப்படுத்தியது, பாதுகாத்தது, திருகோணமலை இன்றும் உலகின் மிகவும் இயற்கையான ஆழமான துறைமுகங்களை கொண்டுள்ளது, பாரிய அபிவிருத்திக்கான திறனை கொண்ட அழகான நகரம் அது. 

நான் அங்கு சென்றவேளை யு.எஸ.;எயிட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் ஐஸ் தொழிற்சாலையை பார்வையிட்டேன், சிறியளவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பதற்கு இது உதவுகின்றது, ஐஸ் தொழிற்சாலைகளிற்கு முன்னதாக இலங்கை அவற்றை ஏற்றுமதி செய்யவேண்டும், நம்புகிறீர்களோ இல்லையோ. 1800 இல் நியுஇங்கிலாந்தில் உள்ள தடாகங்களில் இருந்து வெட்டப்பட்ட ஐஸ் துண்டுகளை பொஸ்;டனை சேர்ந்த வர்த்தகர் ஓருவர் கொழும்பிற்கு அனுப்பியுள்ளார். 

எங்கள் நாடுகளிற்கு இடையில் நீண்ட கால மற்றும் வெற்றிகரமான வர்த்தக உறவுகள் காணப்பட்டன, இது நூற்றாண்டுகால வரலாற்றுகளை கொண்டது. 
1789 ஆம் ஆண்டளவிலேயே அமெரிக்காவின் வர்த்தக மற்றும் திமிங்கில வேட்டையில் ஈடுபட்ட கப்பல்கள் இலங்கை துறைமுகங்களிற்கு வந்திருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சிறந்தநிலையில் காணப்பட்டன, நாங்கள் முத்துக்கள், தேயிலை காரீயம் போன்றவற்றை இறக்குமதி செய்தோம், மருந்துகள், கண்ணாடிப் பொருட்கள், மண்ணெண்ணை போன்றவற்றை இறக்குமதி செய்தோம். இன்று அமெரிக்காவே உங்களது தனியொரு பெரும்சந்தை நாடாக காணப்படுகின்றது, உங்கள் ஏற்றுமதியில் 20 வீதம் அமெரிக்காவிற்கே செல்கின்றது 2014 இல் இது இரண்டரை பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 

இரண்டு நாட்களிற்கு முன்னர் நான் கொழும்பிற்கு வந்தவேளை, தென்னாசியாவின் மிகவும் மும்முரமான துறைமுகத்தை பார்த்தேன், உலகில் 30 துறைமுகங்களில் ஓன்று-வருடாந்தம் 5 மில்லியன் கொள்கலன்களிற்கு மேல் கையாளப்படுகின்றது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நான் எதிர்வுகூறுகின்றேன். 

ஆபிரிக்கா, தென்னாசியா மற்றும் கிழக்காசியாவிற்கு நடுவில் உங்கள் தேசம் அமைந்துள்ளது, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதம் ஆசியாநாடுகளில் இருந்தே உற்பத்தியாகும் எனபொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளன அடுத்த சில தசாப்தத்தில் இந்த பிராந்தியத்தினை தங்கள் இல்லம் என அழைப்பவர்களின் விநியோகம் மற்றும் தேவை காரணமாக உற்பத்திசெய்யப்படும் உலகின் பொருளாதாரத்திற்கும், சர்வதேச ஸ்திரதன்மைக்கும் முக்கியமாக அமையும், இலங்கையை வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான தளமாக மாற்றும் உங்கள் நோக்கினை நாங்கள் பகிர்ந்துகொள்கின்றோம், எங்களுடைய இந்தோ பசுவிக் பொருளாதார முயற்சி மூலம் நாங்கள் உங்களிற்கு இதில் உதவுவோம். 

காலியின் பழைய டச்சுக் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரியத்தை தூதுவர் கெசாப் என்னிடம் விபரித்துள்ளார். மலாக்கா மற்றும் கோர்மஸ் நீரிணைக்களிற்கு இடையில் உள்ள கடற்பாதையில் இலங்கையை கடந்து பயணிக்கும் எண்ணமுடியாத அளவு கப்பல்களை பார்க்கும்போது ஏற்படும் அனுபவத்தை அவர் விபரித்துள்ளார். கடற்வழியாக செல்லும் எண்ணெயில் 45 வீதம் கோர்மஸ் ஊடாக செல்கின்றது, உலகின் வர்த்தக கப்பல்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை மலாக்காநீரிணை ஊடாக செல்கின்றன, இதனை மிக இலகுவாக இவ்வாறு தெரிவிக்கலாம்-முழு உலகின் ஸ்திரதன்மையும் வளமும், இந்த முக்கிய எரிபொருள் மற்றும் வர்த்தகபாதைகளின் ஸ்திரதன்மையிலேயே தங்கியுள்ளது. இலங்கை இதன் மையத்தில் உள்ளது. 

உலகின் ஏனையநாடுகளுடனான உங்கள் உறவுகள் மூலமாகவும்,பல்தரப்பு அமைப்புகளில் ஆழமான ஈடுபாட்டை காண்பிப்பதன் மூலமாகவும் உதாரணம்- இந்து சமுத்திர ரிம் அமைப்பு-இதில் கதிர்காமர் பதவியொன்றை வகித்தது சுட்டிக்காட்ட தக்கது-பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் பிராந்திய முயற்சிகளிற்கு உங்களால் உதவமுடியும்,மற்றும் கடற்பயணபாதுகாப்பிற்கு உதவமுடியும். 

எதிர்வரும் தசாப்தங்களில் இந்து சமுத்திரத்தின் ,பொருளாதாரம், அரசியல்மற்றும் பாதுகாப்பு என்பன உலகின் முக்கிய கவனத்திற்குரிய விடயங்களாக காணப்படும்.இலங்கை தொடர்ந்தும் பிராந்திய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தனது பங்களிப்பைவழங்கும் என நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம்-ஜனநாயக ஆட்சிமுறை,மனித உரிமைகளிற்கு மதிப்பு கடற்போக்குவரத்து சுதந்திரம்,தொடர்ச்சியான அபிவிருத்தி,மற்றும் சூழல்பொறுப்புணர்வு ஆகிய விழுமியங்களை ஊக்குவிப்பவை. 
நீங்கள் ஏற்கனவே பல விடயங்களை சாதித்துள்ளீர்கள் மனித கடத்தலிற்கு எதிராக போராடுவதற்கான வரைவுடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளீர்கள், ஐக்கியநாட்டில் உங்கள் வாக்கு மூலமாகவும், குரல்கொடுப்பதன் மூலமாகவும் சிவிலசமூகத்தினரிற்கு ஆதரவளித்துள்ளீர்கள்,மிக முக்கியமாக ஐக்கியநாடுகள் மனித உரிமைஆணையகத்தின் விசேட அறிக்கையாளரின் ஆசியபசுவிக் கலந்தாய்வை இலங்கையில் நடத்துவதற்கு நீங்கள் சம்மதித்துள்ளீர்கள்,இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக இலங்கையில் மாத்தரமல்ல சர்வதேச அளவிலும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் நீங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். 
உங்கள் இராணுவமும் பிராந்திய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது,கடந்த ஏப்பிரலில் நேபாளத்தினை மிகமோசமான பூகம்பம் தாக்கியவேளை முதலில் முக்கிய நிவராணபொருட்களுடன் அங்கு சென்றது நீங்களே, உங்கள்பொறியியல் பிரிவை சேர்ந்த படையினர் பலகிலோமீற்றர் வீதியை இடிபாடுகளை அகற்றிசுத்தப்படுத்தினர், இதன் மூலம் மிகமோசமான அழிவுகளை சந்தித்திருந்த பகுதிகளிற்கு அம்புலன்ஸ்களும், நிவாரணங்களும் செல்வதற்கு உதவிபுரிந்தனர். 

உங்கள் பிராந்தியம் தீவிரமான காலநிலை மாற்றம் மற்றும் அதிகளவான காலநிலை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய முயற்சிகளிற்கான தேவைகள் மிகவும் அதிகரிக்கும். மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது போன்ற விடயங்களில் இலங்கையின் திறனை பலப்படுத்துவதற்காக இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா ஆர்வமாகவுள்ளது. 
உங்கள் பாதுகாப்பு படையினர் உலகின் பாதுகாப்பு சவால்களிற்கு பங்களிப்பு செய்வதினை அதிகரித்து வருகின்றனர், உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதிகளிற்கு அமைதிப்படையினரை அனுப்பியுள்ளீர்கள், -லெபனான், மத்திய ஆபிரிக்க குடியரசுமற்றும் தென்சூடான். சமீபத்திய உலக தலைவர்களின் அமைதிப்படை உச்சிமாநாட்டில், மேலும் பல படையணிகளை 

அனுப்புவதற்கு ஜனாதிபதி சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதை நாங்கள் பாராட்டினோம், இலங்கையின் எதிர்கால பங்களிப்புகள் தொழில்சார் தன்மையையும் கௌரவத்தையும் வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராகயுள்ளோம். 
அமெரிக்கா இந்த முயற்சிகளை வரவேற்பதுடன்,ஓளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் உங்கள் பாதுகாப்புபடையினரால் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கமுடியும் என எதிர்பார்க்கின்றது, நாங்கள் இணைந்து அனுசரனை வழங்கிய ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் தெரிவித்தது போன்று ‘மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்கள் குறித்த நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறும் பொறிமுறை, இராணுவத்தில் உள்ள உரியவிதத்தில், தொழிற்சார் தன்மையுடன் செயற்பட்டவர்களின் கௌரவத்தைதினை பாதுகாக்கும்” நாங்கள் இந்த அறிக்கையை உறுதியாக வரவேற்கின்றோம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவதில் சகாவாக செயற்பட தயாராகவுள்ளோம், 

இராஜாங்க செயலாளர் கெரியும், தூதுவர் பவரும் உங்கள் நாட்டிற்கான விஜயத்தின் போது தெரிவித்ததை போன்று-இலங்கை தனது ஜனநாயக ஸ்தாபனங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்லின மற்றும் மத சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் நாங்கள் நீண்ட காலமாக உங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்,  நாங்கள் தற்போது வர்த்தகநடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கும், இலங்கையின் எதிர்காலம் குறித்த ஓளிமயமான வாய்ப்புகள் உள்ளது என்பதை உலகிற்கு இணைந்து காண்பிப்பதற்கும் பணியாற்றிவருகின்றோம். 

நாங்கள் தனியார் துறையினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்,குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி குறைவாக உள்ள பிரதேசங்களில். 
நாங்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினரிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீட்டை ஊக்குவித்தல், வர்த்தகத்திற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துதல், போன்ற விடயங்களில் ஆதரவை வழங்கிவருகின்றோம், இந்த முயற்சிகள் நித உதவிகள், உபகரணங்கள், பயிற்சி, சந்தைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டவை, இதன் மூலம் இலங்கையின் அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்தமுடியும், யுத்தத்தினால் விதவையானவர்கர்கள், மீள்குடியேற்றப்பட்ட குடு;ம்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட்டவர்களிற்கும், போட்டி தன்மையும், வெளிப்படையான கொள்வனவு நடைமுறைகளும் காணப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை பொருளாதார அமைச்சருடன் இணைந்து செயற்படுகின்றோம். 

நாங்கள் சட்ட ஓழுங்கை பேணுவதில் திறனை அதிகரிக்க உதவுகின்றோம், பாரிய நிதிமோசடிகள், நம்பிக்கை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றை கண்டுபிடித்து அதற்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்தும் ஊழலிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கும் நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம், 
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஓத்துழைப்பு தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது, இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றம் காரணமாக எதிர்வரும் காலங்களில் நாங்கள் எங்கள் உறவினை மேலும் விஸ்தரிக்கவும், வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம், 

நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சருடன் சில மணி நேரங்களை செலவிடுவதற்கு திட்டமிட்டதற்கு மிக முக்கியமான காரணமொன்றுள்ளது, முதலாவது இலங்கை அமெரிக்க ஓத்துழைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் குழுவிற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார், அடுத்த வருட ஆரம்பத்தில் வாசிங்டனில் நாங்கள் சந்திப்போம்.எங்களுடைய பேச்சுவார்த்தைகள் நான்கு விடயங்களை முக்கிய தூண்களாக கொண்டு அமைந்திருக்கும். 

முதலாவது – ஆட்சி, ஓத்துழைப்பு மக்களிற்கு இடையிலான உறவுகள், அது நீதி, நல்லிணக்கம், மற்றும் கல்விப் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியதாக காணப்படும், 

இரண்டாவது-பொருளாதார ஓத்துழைப்பு, பெண்களை வலுப்படுத்துதல், காலநிலையில் முதலீடு செய்தல், சுத்தமான எரிபொருள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அது காணப்படும், 

மூன்றாவது- பாதுகாப்பு ஓத்துழைப்பு, குறிப்பாக அமைதிப்படை நடவடிக்கைள் மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்கள், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சந்திப்பதில் இலங்கை இராணுவத்தை தயார்படுத்துவதில் உதவுதல். 

நான்காவது-சர்வதேச மற்றும் வெளிவிவகாரங்கள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், கடற்பாதுகாப்பை உறுதிசெய்தல். 

நாங்கள் இந்த ஆரம்ப பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடும் அதேவேளை நாங்கள் எதனை சாதிக்கவுள்ளோம் என்பது குறித்து வெளிவிவகார அமைச்சரும் நானும் உங்கள் மத்தியில பகிர்ந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. 

எனினும் எங்கள் மத்தியிலான ஓத்துழைப்பு அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது உங்களிற்கு புரிந்திருக்கும், இரு நாடுகளின் மக்களும் இதன் மூலம் கிடைக்ககூடிய நன்மைகளை அனுபவிக்க எண்ணலாம், இந்த நாடு கொண்டுள்ள பாரிய சாத்தியப்பாடுகளை பார்த்த பின்னர், எதிர்காலம் பாரிய நம்பிக்கைகளை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரிகின்றது. 

அமெரிக்கா நீங்கள் அந்த நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவும், சக ஜனநாயகநாடு என்ற அடிப்படையில், நீண்ட கால நண்பன், உறுதியான அர்ப்பணிப்புடனாக சகா என்ற அடிப்படையில் நாங்கள் உங்களுடன் உள்ளோம் எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: