கண்டியைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு கோட்டைக் கல்லாற்றைப் வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான, ப.பவித்திரன் புதன் கிழமை (30) கண்டியில் காலமானார். சிறிது காலம் நேய்வாய்ப் பட்டிருந்த அவர் கண்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலநின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் இலங்கையிலும் வெளி நாடுகளிலும் உள்ள பலவானொலிகளில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியதோடு ஊடகவியலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஊடகக் கற்கை நிலையங்களில் வருகைதரு விரிவுரையாளராக் கடமை புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது சடலம் தற்போது அவரது வசிப்பிடமான மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றுக்கு கொண்டு செல்லப்படுகின்றது இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment