31 Dec 2015

சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் வறக்காபொலயில் விபத்து 5 பேர் பலி 22 பேர் காயம் (படங்கள்)

SHARE
கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குழந்தை, மூன்று பெண்கள், ஒரு ஆண் ஆகியோரே இந்த விபத்தில்  உயிரிழந்துள்ளனர்.
சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வானும், பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பஸ்ஸும் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சம்மாந்துறையிலிருந்து அவர்கள் வானில், சென்றுள்ளனர். சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும், வானில் பயணித்தவர்கள் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

மரணித்தவர்களில் சம்மாந்துறை, உடங்கா-1 விளினயடி வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி பாத்திமா பரூசா (25 வயது),இவரின் குழந்தையான சிராஜ் பாத்திமா சாரா (2 வயது)  சென்னல் கிராமம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹீம் ஹபீபத்துன்னிஸா (69 வயது),  சம்மாந்துறை, 3 ஆம் குறுக்குத் தெருவில் 93/B என்ற இடத்தை சேர்ந்த உதுமாலெப்பை நுஸ்ரத் ஜஹான் (27 வயது) வேன் சாரதியான சம்மாந்துறை, நெசவாலை வீதியைச் சேர்ந்த முஹம்மது தம்பி அஹமத் றிபாத் (29 வயது) ஆகியோர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.உறவினர்கள், செய்தியை பார்ப்பவர்களின் மனஅழுத்தம் காரணம் கருதி விபத்துக்குள்ளானவர்களின் தனிப்பட்ட படங்களை நாம் பிரசுரிக்க வில்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.









SHARE

Author: verified_user

0 Comments: