18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்களே எமது பிரதேசத்தில் 45 சிறுவர் குழுக்கள் இயங்குகின்றன. அவற்றுள் தற்போது 35 சிறுவர் குழுக்களைப் பணரமைப்புச் செய்து அக்குழுக்கள் சுயமாக இயங்குகி வருகின்றன. எனவே இவ்வாறான சிறுவர்களுக்கே உரித்தான் அனைத்து உரிமைகளையும் பெரியவர்களாகிய நாங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
என மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை முகைமை செய்யும், நிருவாகத்தினருக்குத் தேவையான காகிதாதிகள் இன்று புதன் கிழமை ( 09) பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்டன. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் கருத்து தெளியிடுகையில்…
சிறுவர்கள் அனைவரும் அவர்களுடைய 18 வயத்திற்குள் கட்டாயக் கல்வியைப் பெற்றுக் கொடுத்தல், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல சிறுவர்கள் தொடர்பான விடையங்களில் பெரியவர்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
இன்றய சூழலில் அனர்த்தங்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் தற்போது மழை காலம் என்பதனால் வெள்ளப்பெருக்கு வருவதற்கான சூழலும் காணப்படுகின்றன இவ்வாறானவற்றில் சிறுவர்கள் சிக்காமலிருக்க சிறுவர்குழுக்களை முகாமை செய்கின்றவர்கள் மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட வேண்டும். அனர்த்தங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுக்காக்க முற்கூட்டியே பெரியவர்கள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க 18 வயதிற்குக் குறைந்த எந்தப் பிள்ளைகளுக்கும் கையடக்கத் தொலையேசியைப் பாவிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. 18 வயத்திற்குக் குறைந்தவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி, மற்றும், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கினற்hர்கள், இதுமாத்திரமில்ல சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வேறு வேலைகளுக்கும் அனுப்புகின்றார்கள். இவ்வாறான விடையங்களைத் தவிர்க்க வேண்டும். கஸ்ற்றங்களை உணருகின்ற பிள்ளைகள்தான் நன்றாகப் படிப்பில் ஆர்வம் காட்டும்.
பல சிறுவர்கள் பெற்றோருக்கோ, அல்லது உறவினர்களுக்கோ கட்டுப்படாத சிறுவர்கள் தற்போதும் வாழந்து வருகின்றார்கள், இவ்வாறானவர்களை இனம்கண்டு, நல்வழிப்படுத்தி கற்றல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவற்றுக்கு சிறுவர் கண்காணிப்புக் குழுக்களும், சிறுவர் கழகங்களை முகாமை செய்பவர்களும், அக்கறை காட்ட வேண்டும்.
2014, 2015, ஆண்டுகளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இடைவிலகிய மாணவர்களை எமது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களுடாக இனங்கண்டு அவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்பியுள்ளோம்.
சிறுவர்களுக்கு பயம்காட்டி, அச்சுறுத்தி, அவர்களை வளப்படுத்த முடியாது, அன்பாகப்பேசி அரவணைத்தால் சிறுவர்களை எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜைகளாக வழப்படுத்த முடியும். எனவே இன்றய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக வருவதற்கு அனைவரும் சிறுவர்கள் மீது அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment