மட்டக்களப்பு குருக்கள்மடம் அசீசி சர்வதேச ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த கலை விழா கிரான்குளம் சீ மூன் ஹேட்டலில் அருட்சகோதரர் செபஸ்ரியான் ஜோஜ் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (06) நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக பிரான்சிக்கன் சகோதரர்களின் கிழக்கு மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜெயராச் அருளானந்தம் பிரான்சிக்கன் சகோதர்களின் கிழக்கு மாகாண பிரதி முதல்வர் அருட்சகோதரர் செல்வநாயகம் மற்றும் அருட்பணி நிர்மல் சூசயராஜ் கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா பாலர்பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.அருந்ததி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட பிரதம அதிதியான பிரான்சிக்கன் சகோதரர்களின் கிழக்கு மாகாண முதல்வர் உரையாற்றுகையில்.
ஓவ்வொரு மாணவர்களும் அப்துல்கலாம் போன்று கனவுகாண வேண்டும் சிறு வயதில் இருந்தே நீங்கள் குறிக்கோளை அடிப்படையாக வைத்து செயற்படவேண்டும். அப்போதுதான் உங்களது இலட்சியம் நிறைவேறி வாழ்வில் நீங்கள் சிறப்படையலாம். நாட்டினைப் பொறுத்தமட்டில் ஆங்கிலக்கல்வி மிகவும் முக்கியமானதாக கொள்ளப்படும் காலகட்டத்தில் அக் கல்வி கிராம மட்டத்தில் எட்டப்படுவதில்லை இதனைக் கருத்தில் கொண்டே நாங்கள் இப்பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான அசீசீ ஆங்கிலப் பாடசாலையை அமைத்து நடாத்தி வருகின்றோம். எம்மால் நடாத்தப்படும் இப்பாடசாலையானது இந்த பிரதேசத்தின் மாணவர்களின் நன்மைகருதி தொடர்சியாக நடைபெறும் இத்தால் உறுதி மொழியளிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்
இதன் போது மாணவர்களுக்கு பரிசில்களும் பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்…
0 Comments:
Post a Comment