9 Dec 2015

இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி.

SHARE

இன்ர நீயூஸ் எனும் சர்வதேச அமைப்பு கடந்த 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை தெரிவு செய்யப்பட்ட 50 இளம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி நெறியொன்றினை வழங்கியது.
இலங்கை பத்திரிகை இஸ்த்தாபனத்தின் கொழும்பில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிறிசி நெறியில் இலங்கையிலுள்ள ஊடக அமைப்புக்களில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் கடமை புரிகின்ற தமிழ், சிங்கள், மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு வதிவிடப் பயிற்சி நடைபெற்று பின்னர் தலா 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இலங்கையின் நாலா பாகங்களுக்கும், இக்குழுக்கள், மக்களின் பிரச்சனைகளை இனங்காணச் சென்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

இப்பயிற்சி நெறியை ஊடக பயிற்றுவிப்பாளர்களான எம்.எஸ்.தேவகௌரி, மற்றும் அமந்தபெரேரா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியதோடு இன்ர நீயூஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சேம் டி சில்வா, மற்றும் இணைப்பாளர்களான தாகா முசமில், சிபான் அகமட் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையிலுள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கு  எதிர் காலத்தில் இதுபோன்ற பயிற்சிகளை நடாத்த இன்ர நீயூஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக இணைப்பாளர் தாகா முசமில் இதன்போது தெரிவித்தார்.






























SHARE

Author: verified_user

0 Comments: