வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை மீண்டும் கிழக்குக்கு கொண்டு வந்து பாரிய முதலீட்டு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .
கடந்த வருடம் கிழக்கின் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட முதலீட்டு அரங்கம் பாரிய வெற்றியை அளித்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக மீண்டும் சர்வதேச உள்நாட்டு ஊக்குவிப்பாளர்களை வரவழைத்து முதலீட்டு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார் . சனிக்கிழமை (12 ) ஏறாவூரில் தனது சொந்த நிதியின் மூலம் சுய தொழில் முயட்சியாளருக்கும் வாழ்வாதார உதவிகள் பெறும் பயனாளிகளுக்கான 40 தையல் இயந்திரம் 12 துவிச்சக்கரவண்டி 27 குடும்பங்களுக்கான கூரைத்தகடுகள் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சமூக நிறுவனங்களுக்கான தளபாடம் மற்றும் கணணி உபகரணங்கள் மின்சார இணைப்புக்கான காசோலை என்பன கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் கிழக்கு மாகாணம் இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த மாகாணத்தை நிர்வகித்து வரும் நிர்வாகம் எந்தவிதமான இன மத கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு பணியாற்றி வருகிறது . இலங்கையில் பல கட்சிகளை பல இனங்களையும் நிர்வாகத்தில் கொண்ட மாகாண சபையாக இது விளங்குகின்றது . மத்திய அரசாங்கத்தை எப்போதும் குறை கண்டு வரும் புலம் பெயர் வாழும் நாட்டில் வாழும் தமிழர்கள் கூட இந்த மாகாண சபையின் முன்மாதிரியை பாராட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலையிலும் அதன் பின்னரும் இம்மாகாண மக்கள் பிறரிடம் கையேந்தும் சமூகமாக வாழ்ந்து வந்தனர் அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் நமது பெண் மணிகள் பணிப்பெண்களாக படையெடுத்து வந்தனர் . இதனால் பல்வேறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து பல இன்னல்களை அனுபவித்து வரும் இந் நிலையினை மாற்றி நாமும் தலை நிமிர்ந்த சமூகமாக வாழ்வதற்கு நானும் என்னை சார்ந்து இருக்கும் மாகாண சபையும் அயராது மக்களுக்காக பணியாற்றி கொண்டு இருக்கின்றோம் என்றும் முதலமைச்சர் கூறினார் .
0 Comments:
Post a Comment