15 Dec 2015

வெங்காயத்தாமரையால் ஆற்று மீன்பிடியாளர்கள் பாதிப்பு

SHARE
ஆற்று மீன்பிடியின் தளமாக விளங்கும் பட்டிருப்பு பாலத்தினை ஊடறுத்துச் செல்லும் வாவியில் வெங்காயத்தாமரை எனும் நீர்த்தாவரம் மீன்பிடி தொழிலில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர் தெரிவிக்கின்றனர்.
தோணி செலுத்த முடியாத அளவிற்கு இந்தாவரம் ஆற்றில் சுமார் ஒரு மாதகாலமாக  எந்த வித அசைவும்மின்றி காணப்படுவதுடன்  என்றும் இல்லாதவாறு கூடியளவு இம்முறை காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஒரு மாதகாலமாக தங்களின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு நீண்ட நாட்களாக காணப்படும் இந்தாவரத்தினை அகற்ற சம்மந்ப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாதவிடத்து எமது தொழில் முற்று முழுதாக தடைப்படும் நிலை ஏற்படலாம் எனவும் ஆற்று மீன்பிடியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: