31 Dec 2015

பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் !!

SHARE
எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் செனவிரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதனை கவனத்திற் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் முதற் கட்டமாக 5000 பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்களை வழங்க தீர்மானித்துள்ளது.
ஏனைய பட்டதாரிகளுக்கும் மிக விரைவில் நியமனக் கடிதங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஒரு தொகை நிதியையும், அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்படுகின்ற ஒரு தொகை நிதியையும் வைத்து அமைக்கப்படுகின்ற பங்களிப்பு ஓய்வூதிய முறையினூடாகவே எதிர்வரும் காலங்களில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
100 நாட்கள் வேலைத்திட்டம் என்பது தேசிய கொள்கைகளின் ஒரு செயற்பாடாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் பல வகையான நன்மைகளை பெற்றுக் கொண்டனர். நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் தேவையான சகல அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் வீதி, மின்சாரம், சுகாதாரம், கல்வி என பல துறைகளை குறிப்பிட முடியும்.
அதேவேளை, இன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மனித வளங்களாக பயன்படுத்தும், ஊழியர்களின் எதிர்காலம் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: