31 Dec 2015

ஐரோப்பி ஒன்றியத்தின் பிள்ளைநேய அனுகுமுறை ஊடாக தரமான ஆரம்பக்கல்வியை அபிவிருத்தி செய்தல்

SHARE
ஐரோப்பி ஒன்றியத்தின் நிதி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் சம்மாந்துறை வலய பிள்ளைநேய பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளுக்கு ரூபா 10 இலட்சம் வீதம் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஆகிவற்றுடன் ‘பிளேன் இன்டநெசனல்;’ நிறுவனம் இணைந்து “பிள்ளைநேய அனுகுமுறை ஊடாக தரமான ஆரம்பக்கல்வியை அபிவிருத்தி செய்தல்”; எனும் இந்த வேலைத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு  இரண்டு கட்டங்களாக (21,22,23) மற்றும் (28,29,30) ஆகிய தினங்களில் கல்முனை எஸ்.எல்.ஆர். ஹோட்டலில் நடைபெற்றது.

மாகாண உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.உதயகுமார், வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.நஜீம், வலயக்கல்வி அலுவலக வளவாளர்கள் குழாம் மற்றும் ‘பிளேன் இன்டநெசனல்;’ நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திரு.சுதர்ஸன், திரு.எஸ்.ரவிச்சந்திரன் உட்பட  ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 









SHARE

Author: verified_user

0 Comments: