மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவ பெயற்சி மழை தற்போது வரைக்கும் பெய்து வருகின்றது. இந்நிலையில் இவ்வருடம் ஜனவரி முதல் இன்று வியாழக் கிழமை (10) காலை 8.30 மணிவரையான இவ்வருடத்தில் 1742.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாட்டத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடமை நேர அதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்வரும் மழை காரணமாக மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும் மழை நிர் தேங்கி நிற்பதனால் மக்கள் உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் பலத்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இவற்றினை விட பல கிராமங்களின் உள்வீதிகளும் பழுதடைந்துள்ளதோடு, விவசாயிகளும், தோட்டத் தொழிலாளர்களும், பலத்த பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment